ஆர்டர் அதிரும்.. ரூ.14,000 போதும்.. 656-இன்ச் டிஸ்பிளே.. Dimensity 6020.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?
ஒப்போ, மோட்டோ, சியோமி போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது விவோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது விவோ.
அதாவது தற்போது விவோ ஒய்367 (vivo Y36 ) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். தற்போது இந்த புதிய விவோ சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விவோ ஒய்367 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஒய்367 அம்சங்கள் (vivo Y36 specifications): விவோ ஒய்367 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்367 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
13எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்367 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ ஒய்367 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ ஒய்367 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (15W charging support) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனில் சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்(Side Facing Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது.

புளூடூத் 5.1, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஒய்367 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனை பர்பிள் மற்றும் கோல்ட் நிறங்களில் வாங்க முடியும். மேலும் விவோ ஒய்367 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1,199 yuan (இந்திய மதிப்பில் ரூ.14,000) ஆக உள்ளது.
அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








