Home
Mobile

ரூ.9,499 போதும்.. 44W பாஸ்ட் சார்ஜிங்.. இரண்டு அசத்தலான Vivo போன்களுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தற்போது அசத்தலான இரண்டு போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதாவது விவோ Y36 மற்றும் விவோ Y02t போன்களுக்கு தான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y36 ஸ்மார்ட்போன் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.15,999-க்கு வாங்க முடியும். அதேபோல் விவோ Y02t போன் முன்பு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் விவோ Y02t போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும்.

இரண்டு அசத்தலான Vivo போன்களுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

விவோ ஒய் 36 (vivo Y36) ஸ்மார்ட்போன் ஆனது 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2388 × 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ ஒய் 36 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் விட ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ ஒய் 36 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த விவோ ஒய் 36 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய் 36 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இதுதவிர 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

இரண்டு அசத்தலான Vivo போன்களுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போன் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் பெற்றிருக்கிறது இந்த விவோ போன்.

அதேபோல் விவோ Y02t போன் ஆனது 6.51-இன்ச் டிஸ்பிளே, ஹீலியோ பி35 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விவோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் அசத்தலான போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொ போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y36 and vivo Y02t phones price slashed: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X