ஆரம்பமே அட்டகாசம்: 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிட்ட Vivo.!
இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அட்டகாசம் செய்து விவோ நிறுவனம். அதாவது விவோ நிறுவனம் புதிய Vivo Y35m ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, Dimensity சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

விவோ Y35m
அதேபோல் விவோ நிறுவனம் இந்த விவோ Y35m ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாக உதவும். பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 13
மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

13எம்பி மெயின் கேமரா
புதிய விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 50எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். இதுதவிர எல்டிஇ பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

128ஜிபி ஸடோரேஜ் வசதி
விவோ Y35m ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டான் கோல்ட், ஐஸ் கிளவுட் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக்நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ Y35m போனின் விலை?
5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன்.
4ஜிபி ரேம் கொண்ட விவோ Y35m போனின் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,700) ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.19,100) விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.20,300) விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








