ட்ரிபிள் ரியர் கேமரா வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ Vivo Y35 போன்.!
சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் இந்தியாவில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y35 4G
குறிப்பாக இந்த விவோபோன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது விவோ Y35 4G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ Y35 4G ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது.
பின்பு 1080 × 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். அதாவது இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அருமையான சிப்செட் வசதி
மீடியாடெக் சிப்செட் கொண்ட போன்களை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவரும் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி இந்தவிவோ Y35 4G போன் தரமான குவால்காம் 6என்எம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.
மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி ரேம்
விவோ Y35 4G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது . மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த விவோபோன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் கேமரா
விவோ Y35 4G ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி bokeh சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அனைத்து இடங்களிலும் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான விவோ Y35 4G போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
விவோ Y35 4G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதுதவிர44 வாட்ஸ் பிளாஷ்சார்ஜ் ஆதரவு, கைரேகை சென்சார் போன்ற பல அசத்தலான அம்சங்கள் இவற்றுள அடக்கம்.

5ஜி ஆதரவு இல்லை
இந்த போனில் அனைத்து அம்சங்களுமே சிறப்பாக உள்ளது, ஆனால் 5ஜி ஆதரவு தான் இல்லை. அதாவது டூயல் சிம்,4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பலகனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

என்ன விலை?
இந்தோனேசியாவில் புதிய விவோ Y35 4G ஸ்மார்ட்போனின் விலை IDR 33,99,000 (இந்திய மதிப்பில் ரூ.18,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ Y35 4G ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








