8 ஜிபி ரேம், டிரிபிள் கேமரா வசதியோடு விவோ ஒய்33டி- பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை ரூ.18990 ஆக இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை முழுமையாக பார்க்கலாம்.

விவோ ஒய்33டி ஸ்மார்ட்போன்
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 (இன்று) அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம் நாட்டில் அறிமுகமான விவோ ஒய்21டி ஸ்மார்ட்போனை விட விவோ இரண்டு மேம்படுத்தல்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக ரேம் மற்றும் அதிக தெளிவுத்திறன் கொண்ட செல்பி கேமராவுடன் வருகிறது. விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனில் பொதுவாக விவோ போனில் கிடைக்கும் வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. விவோ ஒய்21டி ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகிறது.

விவோ ஒய்33டி விலை மற்றும் கிடைக்கும் தன்மை
விவோ ஒய்33டி விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18990 என இருக்கிறது. இந்த போன் மிட்டே ட்ரீம் மறறும் மிரர் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. ஜனவரி 10 முதல் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர், பேடிஎம், டாடா, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
விவோ ஒய்21டி ஸ்மார்ட்போன் நாட்டில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,490 ஆக இருக்கிறது. விவோ ஒய்33டி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது டூயல் சிம் நானோ ஆதரவு, ஆண்ட்ராய்டு ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவோடு 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டிருக்கிறது. இந்த போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 8 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. விவோ ஒய்21டி ஸ்மார்ட்போன் போல் இல்லாமல் விவோ ஒய்33டி உள்ளமைக்கப்பட்ட ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 4 ஜிபி வரை ரேம் நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு வருகிறது. இதன் மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது 128 ஜிபி உள்சேமிப்பு நீட்டிப்பு ஆதரவை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.


Click it and Unblock the Notifications