ஆகஸ்ட் 23: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான விவோ Y33s ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி தனது புதிய விவோ Y33s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும்.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y33s ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப்
பார்ப்போம்.
விவோ Y33s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இது 5ஜி ஸ்மார்ட்போன் கிடையாது. குறிப்பாக 4ஜி ஆதரவுடன் விவோ Y33s ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விவோ Y33s ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.
குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த விவோ Y33s ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த விவோ Y33s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5 மற்றும் யுஎஸ்பி ஓடிஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y33s ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் அனைத்து வசதிகளும் அருமையாக உள்ளது என்றே கூறலாம், ஆனால் எப்போதும் வழங்கப்படும் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications