Home
Mobile

திடீரென விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் விலை உயர்வு.!

விவோ நிறுவனதத்தின் ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.18,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ ஒய்33 எஸ்

இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும்
1080×2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸமார்ட்போனின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்

விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரே

இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்க ஸ்லாட் வசதி இருக்கிறது.

விவோ ஒய்33 எஸ்

விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர், ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காமர்ஸ் மற்றும் கைரோஸ்கோப் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் எடை

இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் எடை 182 கிராம் ஆகும். மேலும் டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிகமாக விற்பனைசெய்யப்படுகின்றன. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y33s Smartphone Price Hike in India: Here the Details!Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X