விவோ அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்32 (Vivo Y32) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபி69 ரேட்டிங், 8000எம்ஏஎச் பேட்டரி, யுனிசாக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ ஒய்32 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்32 அம்சங்கள் (Vivo Y32 specifications): 6.87-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1592 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான யுனிசாக் டி7300 சிப்செட் (Unisoc T7300 chipset) உடன் விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியும் விவோ ஒய்32 ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த விவோ போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகி உள்ளது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ ஒய்32 போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 230 கிராம் ஆகும். ரெட் மற்றும் சன்செட் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
தற்போது விவோ ஒய்32 ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவோ ஒய்32 போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை விவோ நிறுவனம். விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications
