Home
Mobile

அசத்தலான விவோ Y32 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம் சீனாவில் விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தரமான சிப்செட் வசதி மற்றும் அருமையான
கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது விவோ Y32 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y32 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் டில்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

விவோ Y32 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் டில்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y32 ஸ்

விவோ Y32 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y32 ஸ்மார்ட்போனில்

விவோ Y32 ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y32 ஸ்மார்ட்போனின்

விவோ Y32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள

விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y32 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்

டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடல். ப்ளூ, ஃபோகி நைட் என்ற இரண்டு நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை ¥1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,745) ஆக உள்ளது.கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ Y76 5G

விவோ Y76 5G

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம். விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும்
1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 460 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை
அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின்

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய விவோ Y76 5G

புதிய விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதிஉள்ளதாக கூறப்படுகிறது. பின்பு FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் விவோ Y76 5G மாடல்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில்

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யுஎஸ்பி ஒடிஜி, டூயல் சிம் ஆதரவு, கைரேகை சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Y32 with 5,000mAh battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X