Home
Mobile

விவோ களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 50எம்பி எம்பி கேமரா.. 7200எம்ஏஎச் பேட்டரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விரைவில் விவோ ஒய்31டி (Vivo Y31T) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ ஒய்31டி படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ ஒய்31டி அம்சங்கள் (Vivo Y31T Specifications): 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1250 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

விவோ களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 50எம்பி எம்பி கேமரா..எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Qualcomm's Snapdragon 4 Gen 2 chipset)உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.

7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 50எம்பி எம்பி கேமரா..எந்த மாடல்?

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் கிரிம்சன் ரெட், கோல்ட் மிஸ்ட் மற்றும் சீஷோர் கிரீன் ஆகிய கலர்களில் புதிய விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய விவோ ஒய்31டி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ ஒய்31டி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credits: xpertpick

Best Mobiles in India

English summary
Vivo Y31T images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X