சத்தமின்றி அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்.. 7200எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்31டி 5ஜி (Vivo Y31T 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 50எம்பி கேமரா, IP69 ரேட்டிங், 7200எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ ஒய்31டி 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்31டி 5ஜி அம்சங்கள் (Vivo Y31T 5G specifications): 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்31டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஒய்31டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதுவும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ ஏரேஸ் (AI Erase), ஏஐ கேப்சன் (AI Captions) போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

7200எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய போனில் உள்ளது. 5ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. ஃபெஸ்டிவ் ரெட், சீஷோர் கிரீன் மற்றும் நோபல் கோல்ட் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
விவோ ஒய்31டி 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை விவோ நிறுவனம். கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.
photo credits: vivo, gizmochina


Click it and Unblock the Notifications