மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. புது Vivo ஸ்மார்ட்போன்!
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைத்த மாடல்கள் எல்லாம், விலை ஏற்றம் காரணமாக மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டுக்கு சென்றுவிட்டன. ஆனால், அதில் கிடைத்த பீக்கர்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், நேரடியாக மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கும் விவோ ஒய்31டி 5ஜி (Vivo Y31T 5G) ஸ்மார்ட்போன் பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது.
பிரீமியம் டியூரபிலிட்டி மாடலாக இது இருக்கிறது. ஏனென்றால், எஸ்ஜிஎஸ் கோல்டு லேபில் பைவ்-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கிறது. ஹை-பிரசர், ஹை-டெம்ப் வாட்டர் ஜெட் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. ஒன்-டேப் வாட்டர் & டஸ்ட் எஜெக்சன் உள்ளது.

விவோ ஒய்31டி 5ஜி அம்சங்கள் (Vivo Y31T 5G Specifications): 6.75 இன்ச் (1608 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1250 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Snapdragon 4 Gen 2 4nm) சிப்டெட்டை கொடுத்து இருக்கிறது.
ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏஐ கிரியேஷன் (AI Creation), ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), டிராக் & கோ (Drag & Go), பிரைவேட் ஸ்பேஸ் (Private Space) மற்றும் விவோ டாக்மாஸ்டர் (Vivo DocMaster) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி ஏஐ வைடு ஆங்கிள் ரியர் கேமரா கிடைக்கிறது.
2 எம்பி பொக்கெ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. நைட் மோட், போர்ட்ராய்டு மோட், லைவ் போட்டோ, ஸ்லோ-மோ, டைம்-லேப்ஸ், ப்ரோ உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. கிரிம்ஷன் ரெட் (Crimson Red), கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் சீசோர் கிரீன் (Seashore Green) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
எஸ்பிஐ, ஐசிஎப்சி, யெஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 10 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் பெற்று கொள்ளலாம். விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-store) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications