வெளுத்துக் கட்டும் அமேசான்.. 33 சதவீத ஆஃபரில் விவோ 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
தற்போது அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ 5ஜி போன் ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்31டி 5ஜி (Vivo Y31T 5G) ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.25499 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்31டி 5ஜி அம்சங்கள் (Vivo Y31T 5G specifications): விவோ ஒய்31டி 5ஜி போன் 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஒய்31டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
அதேபோல் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ ஏரேஸ் (AI Erase), ஏஐ கேப்சன் (AI Captions) போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
அதுவும் 7200எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய போனில் உள்ளது. 5ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.கிரிம்ஷன் ரெட் (Crimson Red), கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் சீசோர் கிரீன் (Seashore Green) கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
