ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.1,300 ஆஃபர் ரேட்ல 7200mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்ட விவோ பிரியர்களுக்கு விவோ ஒய்31டி 5ஜி (Vivo Y31t 5G) ஸ்மார்ட்போன் பக்காவாக இருக்கும். ஏனென்றால், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 35 சதவீத தள்ளுபடி போக ரூ.25,995 விலைக்கு 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,300 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,695 விலைக்கு இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

அதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 33 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.29,995 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,495 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
விவோ ஒய்31டி 5ஜி அம்சங்கள் (Vivo Y31t 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வருகிறது.
இந்த ஓர்ஜின்ஓஎஸ் வெர்ஷனில் ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), டிராக் & கோ (Drag & Go) மட்டுமல்லாமல், ஏஐ கிரியேஷன் (AI Creation) பிரைவேட் ஸ்பேஸ் (Private Space) மற்றும் விவோ டாக்மாஸ்டர் (Vivo DocMaster) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் (1608 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது.
1250 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி பொக்கெ கேமராவை இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமரா கிடைக்கிறது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லைவ் போட்டோ (Live Photo) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்லோ-மோ (Slo-Mo), டைம்-லேப்ஸ் (Time Lapse) உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன.
44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரியை இந்த விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், கிரிம்ஷன் ரெட் (Crimson Red), கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் சீசோர் கிரீன் (Seashore Green) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட், 5ஜி எஸ்ஏ/ என்எஸ்ஏ, வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
