எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 7200எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்31டி 5ஜி போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்31டி 5ஜி அம்சங்கள் (Vivo Y31T 5G specifications): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஒய்31டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்31டி 5ஜி போன் வெளியாகி உள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
அதுவும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு விவோ ஒய்31டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ ஏரேஸ் (AI Erase), ஏஐ கேப்சன் (AI Captions) போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
மேலும் 7200எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய போனில் உள்ளது. 5ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. கிரிம்ஷன் ரெட் (Crimson Red), கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் சீசோர் கிரீன் (Seashore Green)ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
