மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ.. புதிய Vivo Y31s விரைவில் இந்தியாவில் அறிமுகம்..

|

விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது புதிதாக அதன் 'Y' சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலில் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை சேர்த்துள்ளது. விவோ நிறுவனம் தற்பொழுது விவோ Y31s என்ற பட்ஜெட் விலை மாடலை 5ஜி தொழில்நுப்டப்பதுடன் அறிமுகம் செய்துள்ளது.

விவோY31s

விவோY31s

சீனாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோவின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலில் இந்த புதிய விவோY31s சேர்க்கப்பட்டுள்ளது. விவோ ஒய் 31s ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் 5 ஜி நெட்வொர்க் ஆதரிக்கிறது. இது அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஃபன் டச் ஓஎஸ் 10.5 உடன் வருகிறது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.58' இன்ச் 1080 x 2408 பிக்சல்கள் கொண்ட FHD பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் 8 எம்.பி சென்சார் உடன் கூடிய வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.

டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

கேமரா

கேமரா

பின்புறத்தில் 13 எம்பி சென்சார், 2 எம்பி பொக்கே சென்சார் உள்ளது. 5 ஜி நெட்வொர்க் ஆதரவைத் தவிர, விவோ ஒய் 31 எஸ் மாடலில் 4 ஜி வோல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி உடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

விவோ ஒய் 31 எஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,926 என்ற விலையிலும், இதன் 6 ஜிபி ரேம் மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 19,188 என்ற விலையிலும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ரெட், சில்வர் , க்ரெய் நிறங்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y31s With Snapdragon 480 SoC Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X