சத்தமில்லாமல் விவோ அறிமுகம் செய்த புதிய Vivo Y31s ஸ்டாண்டர்டு எடிஷன்.. விலை என்ன தெரியுமா?
விவோ நிறுவனம் Vivo Y31s என்ற புதிய ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய விவோ ஒய் 31 எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் குவால்காம் ஸ்னாப் டிராகன் 480 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த ஸ்டாண்டர்டு எடிஷன் விவோ ஒய் 31 எஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன்
தனித்துவமான சிப்செட் தவிர, புதிய ஸ்மார்ட்போன் இனப்பிரியர் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது அசல்-எடிஷனில் கிடைக்கும் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே அளவிலும் சிறியது. விவோ ஒய் 31 எஸ் ஸ்மார்ட்போன் மற்றும் விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் மீதமுள்ள விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் தற்போதுள்ள மாடலுடன் ஒத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷனின் விலை
விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷனின் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.19,100 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் லேக் லைட் ப்ளூ, டைட்டானியம் கிரே மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இருப்பினும், உலக சந்தைகளில் அதன் வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் சிறப்பம்சம்
- 6.51 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
- வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
- 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
- டூயல் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 5 ஜி
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை
- புளூடூத் 5.1
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 ஆடியோ ஜாக்
- 18W டூயல் எஞ்சின் பாஸ்ட் சார்ஜிங்
- 5000 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications