வந்துட்டான் யா வந்துட்டான்.. 6500mAh பேட்டரி, 44W சார்ஜிங், IP69K உடன் புது VIVO 5ஜி போன்.. எந்த மாடல்?
44W பிளாஷ்சார்ஜ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் 6500mAh ப்ளூவோல்ட் பேட்டரி உடன் ஒரு புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது விவோ ஒய்31எஸ் 5ஜி (Vivo Y31s 5G) மாடல் ஆகும். இது விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் (Mid-range) ஸ்மார்ட்போனாக மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பெரும்பாலும் இது கூடிய விரைவில் இந்திய சண்டைக்கும் வரும், ஏனென்றால் இந்திய சந்தையில் ஏற்கனவே பல விவோ ஒய்-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் இங்கே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், நிச்சயமாக விவோ ஒய்31எஸ் 5ஜி மாடலும் இந்தியாவில் அறிமுகமாகும்.

விவோ ஒய்31எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மாட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இது 6.74 இன்ச் அளவிலான புல் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பும், 32 மெகாபிக்சல் கொண்ட செல்பீ கேமராவும் உள்ளன. இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆர்ஜின்ஓஎஸ் 6 கொண்டு இயங்குகிறது.
விவோ ஒய்31எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: மலேசியாவில், விவோ ஒய்31எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.35,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 க்கும் மேலான பட்ஜெட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.18,999 என்கிற ஆரம்ப விலையில் தான் வெளியானது. ஆனால் இப்போதைக்கு விவோ ஒய்31எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது இது பிளாக் மற்றும் பர்பிள் கலர்களில் விவோ மலேசிய இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் வாங்க கிடைக்கிறது
விவோ ஒய்31எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆர்ஜின் ஓஎஸ் 6
- 1050 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.74-இன்ச் புல் எச்டி டிஸ்பிளே
- வெளிப்புறங்களில் ஸ்க்ரீனை தெளிவாக பார்க்கும் வசதிக்காக, விவோ இதை சன்லைட் டிஸ்பிளே (Sunlight Display) என்று சந்தைப்படுத்துகிறது
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- போர்ட்ரெய்ட் (Portrait) புகைப்படங்களுக்காக 2 மெகாபிக்சல் போக்கே (Bokeh) சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5ஜி, என்எப்சி (NFC) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
- இந்த போன் கால் ரெக்கார்டிங் (call recording) மற்றும் ஆடியோ ரெக்கார்டிங் (audio recording) வசதிகளையும் ஆதரிக்கிறது
- இதில் ஹை-ஃபை (Hi-Fi) ஆடியோ வசதி இல்லை என்று விவோ வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது
- 44வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் (44W FlashCharge Fast Charging) வசதி
- 6500mAh ப்ளூவோல்ட் (BlueVolt) பேட்டரி
- தோராயமாக 209 கிராம் எடையை கொண்டுள்ளது
- நீடித்து உழைக்கும் தன்மைக்காக, தூசி மற்றும் நீர் புகாத பாதுகாப்பிற்காக IP68, IP69 மற்றும் IP69K ஆகிய தரச்சான்றுகளை கொண்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications