சத்தமின்றி புதிய Vivo போன் அறிமுகம்.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்31டி (Vivo Y31d) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 7200mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்31டி அம்சங்கள் (Vivo Y31d Specifications): 6.75-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1,570 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் இந்த போனில் சக்திவாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 2 சிப்செட் (octa-core Snapdragon 6s 4G Gen 2 chipset) உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டர லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புது விவோ போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)உடன் விவோ ஒய்31டி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. புளூடூத் 5.1, டூயல்-பேண்ட் வைஃபை, யூ.எஸ்.பி 2.0, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் உள்ளன.
தற்போது விவோ ஒய்31டி போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விலையை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போனின் விலை வெளியாகும். அதேபோல் இந்த விவோ ஒய்31டி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








