Home
Mobile

மார்க்கெட்டை புரட்டி போட்ட Vivo.. 6500mAh பேட்டரி.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்31 ப்ரோ 5ஜி (Vivo Y31 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6500எம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய்31 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y31 Pro 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 2408 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பிரைட்னஸ், 393 ppi உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட்டை புரட்டி போட்ட Vivo.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 பிராசஸர் (MediaTek Dimensity 7300 Processor) உடன் இந்த புதிய விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.

பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் விவோ ஒய்31 ப்ரோ 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு வைஃபை 5, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்31 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.20,999-ஆக உள்ளது. ட்ரீமி ஒயிட் மற்றும் மோச்சா பிரவுன் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. விவோ ஸ்டோர், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo Y31 Pro 5G With IP64 Rating Launched in India Price Specifications Check Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X