மொத்த மார்க்கெட்டையும் செஞ்சிட்டான்.. பட்ஜெட் விலையில் புதிய VIVO 5ஜி போன்.. IP69, 6500mAh பேட்டரி!
விவோ (Vivo) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் 5ஜி விலை ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அது விவோ ஒய்31 5ஜி (Vivo Y31 5G) ஸ்மார்ட்போனாகும். இது மலிவு விலையில் ஹை-எண்ட் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான பாதுகாப்பு, ஒரு பெரிய பேட்டரி பேக் மற்றும் பலவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Vivo Y31 5G Specifications): சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோவின் புதிய விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் 4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் உடனான,ஸ் சற்றே உயரமான 6.68-இன்ச் எல்சிடி பேனலை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 50எம்பி ஏஐ டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதே பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களில் மிகவும் குறைவாகவே காணப்படும் ஒரு அம்சமும் இதில் உள்ளது. அது IP68 மற்றும் IP69 ரேட்டிங் ஆகும். இந்த ரேட்டிங் ஆனது விவோ ஒய்31 ஸ்மார்ட்போனை தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் கொண்டதாக மாற்றுகிறது.
மேலும் இந்த மாடல் சுமார் 209 கிராம் எடையும், தடிமன் அடிப்படையில் 8.39 மிமீ அளவையும் கொண்டுள்ளது. கனெக்ட்விட்டியை பொறுத்தவரை ப்ளூடூத் 4.2, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்ப டைப்-சி 2.0 போர்ட் ஆகியவற்றைகொண்டுள்ளது. "மீண்டும்" மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ ஏரேஸ் (AI Erase) மற்றும் சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்களை கொண்டுள்ளது.
விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Vivo Y31 5G Price in India): விவோவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று - Diamond Green, மற்றொன்று - Rose Red ஆகும். மேலும் முன்னாடி குறிப்பிட்டபடி இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128இன்டர்னல் ஸ்டோரேஜ்: விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடலின் அசல் விலை ரூ.19,999 என்றும், அதே நேரத்தில் 6ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.21,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
ஆனால் தற்போதைய நிலவரப்படி, விவோவின் இந்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது (4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம்) முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 என்கிற ஆபர் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக மாணவர்களுக்கு ரூ.500 தள்ளுபடியும், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் ரூ.1,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி ஆகிய விற்பனை சலுகைகளும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications