Home
Mobile

மார்கெட் மிரளுது.. வெறும் ரூ.14,110 போதும்.. 6500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

நம்ப முடியாத அடிமட்ட பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் விவோ வி300டி (Vivo Y300t) களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐக்யூ இசட்10எக்ஸ் (iQOO Z10x) போன்தான் இதன் ரீபிராண்ட் வெர்ஷனாக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் ஐக்யூ இசட்10 (iQOO Z10) போனானது வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த போனுடன் ஐக்யூ இசட்10எக்ஸ் மாடலும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு டிசைன் மற்றும் பீச்சர்களும் கசிந்துள்ளன. இந்த டிசைனும், பீச்சர்களும் சீனாவில் வெளியாகி இருக்கும் விவோ வி300டி போனை போலவே இருக்கிறது.

மார்கெட் மிரளுது.. வெறும் ரூ.14,110 போதும்.. 6500mAh பேட்டரி மாடல்!

ஆகவே, இந்தியாவில் விவோ வி300டி போன்தான் ஐக்யூ இசட்10எக்ஸ் மாடலாக வெளியாக இருப்பது தெரிகிறது. சொல்லப்போனால், ஐக்யூ மற்றும் விவோ மாடல்கள் முதலில் சீனாவில் வெளியாகிய பிறகே இந்திய மார்கெட்டில் வெளியாகும். இதனாலேயே விவோ வி300டி போனின் விவரங்களை இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் தேடிப்பிடித்து பார்க்க தொடங்கிவிட்டனர்.

விவோ வி300டி அம்சங்கள் (Vivo Y300t Specifications): இந்த விவோவில் ஓர்ஜின்ஓஎஸ் 15 (OriginOS 15) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 730) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.

6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த விவோ வி300டி போனில் நான்கு வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.

மார்கெட் மிரளுது.. வெறும் ரூ.14,110 போதும்.. 6500mAh பேட்டரி மாடல்!

8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ஆனால், இந்திய மார்கெட்டை பொறுத்தவரையில் மூன்று வேரியண்ட்கள் மட்டுமே அதிகபட்சமாக வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த விவோ போனில் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. மேலும், 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 2X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மற்றும் டஸ்ட் ப்ரூப், வாட்டர் ப்ரூப் மற்றும் டிராப் ப்ரூப் கிடைக்கிறது. இந்த விவோ வி300டி போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ பீக்கர்கள், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,110ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,290ஆக இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,640ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,640ஆகவும் இருக்கிறது. ஓசன் ப்ளூ, ராக் ஒயிட் மற்றும் பிளாக் காபி கலர்களில் கிடைக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300t With 12GB RAM 50MP Camera 6500mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X