Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்300ஐ (Vivo Y300i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் மார்ச் 14-ம் தேதி இந்த புதிய விவோ போன் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய விவோ ஒய்300ஐ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய்300ஐ அம்சங்கள் (Vivo Y300i specifications): 6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதிர போகுது மார்க்கெட்.. புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்(Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்300ஐ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்300ஐ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஜேட் பிளாக் (Jade Black), ரைம் ப்ளூ (Rime Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) நிறங்களில் விவோ ஒய்300ஐ போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விவோ ஒய்300ஐ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300i specifications, release date revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X