Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்300சி (Vivo Y300c) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்300சி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்300சி அம்சங்கள் (Vivo Y300c Specifications): 6.77-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்300சி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பிரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல சிறப்பன அம்சங்கள் உள்ளன.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் விவோ ஒய்300சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்300சி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதி இந்த புதிய விவோ போனில் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் சான்றிதழ் (SGS five-star certification) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல வசதிகள் இந்த விவோ போனில் உள்ளன.

6500mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்300சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் இந்த போனில் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

ஆனால் விவோ ஒய்300சி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை 1,399 Yuan (இந்திய மதிப்பில் ரூ.16,629) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo Y300c launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X