Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16,290 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ ஒய்300 5ஜி மொபைல் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், இப்போது சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கும் விவோ ஒய்300 (Vivo Y300) வேரியண்ட்டானது, இந்திய வேரியண்ட்டைவிட கம்மியான பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களுடன் வந்திருக்கிறது. ஆகவே, வேறு பெயரில் இந்த மாடல் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால், இந்திய பிரியர்கள் அந்த மாடலுக்காக வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த சீன வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கிறது.

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் விவோ ஒய்300 5ஜி வெளியாகியது. ரூ.21,999 பட்ஜெட்டில் விலை இருந்தது. ஆனால், சீனாவில் வெளியான விவோ ஒய்300 போனானது, ரூ.16,290 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, சாம்சங் சென்சார் மெயின் கேமரா, ஓம்னிவிஷன் செல்பீ கேமரா போன்ற பீச்சர்களில் பின்னியெடுத்துள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16,290 போதும்.. AMOLED டிஸ்பிளே மாடல்!

விவோ ஒய்300 அம்சங்கள் (Vivo Y300 Specifications): இந்த விவோ போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது. இந்திய வேரியண்ட்டில் ஆக்டோ கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 4 Gen 2) சிப்செட் வந்தது. இந்த டைமன்சிட்டி கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. இந்த விவோவில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டயமெண்ட் சீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) உள்ளது.

6500mAh பெரிய பேட்டரியுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது. IP64 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. கிரீன் பைன், ஸ்னோவ் ஒயிட் மற்றும் ஸ்டார் டயமெண்ட் பிளாக் கலர்களில் இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எஸ்5கேஜேஎன்எஸ் (Samsung S5KJNS) சிப்செட் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. கேல்கோர் ஜிசி02எம்1 (Galcore GC02M1) டெப்த் கேமராவில் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவோ ஒய்300 போனில் 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு மூன்று ஸ்பீக்கர்களை கொடுத்து, கூடவே 3டி பனோராமிக் ஆடியோ (3D Panoramic Audio) சப்போர்ட்டை கொடுத்து இருக்கிறது. விலையை தெரிந்து கொள்வோம்.

இந்த போனின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,290ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,620ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,950ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.23,285 பட்ஜெட்டில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 With 50MP Camera 12GB RAM 6500mAh Battery Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X