Samsung-க்கு செக் வைக்கும் Vivo.. 6500mAh பேட்டரி, 80W சார்ஜிங் உடன் Pro மாடலை இறக்குது!
6000mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன் என்றாலே அது சாம்சங் மடலாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு "6000mAh பேட்டரி பிரிவை" தென்கொரிய நிறுவனமான சாம்சங் ஆட்சி செய்கிறது. மிகவும் சமீபத்தில் தான் மற்ற நிறுவனங்களும் (ஒன்பிளஸ் உட்பட) 6000mAh பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட தொடங்கியுள்ளன. அந்த வரிசையில்.. இன்னும் ஒருபடி மேலே சென்று.. விவோ நிறுவனமானது 6500mAh பேட்டரி கொண்ட போர் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அது என்ன மாடல்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது விவோ ஒய்300 சீரீஸின் ப்ரோ வேரியண்ட் ஆன விவோ ஒய்300 ப்ரோ (Vivo Y300 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கூடிய விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதை தொடர்ந்து இந்திய சந்தைக்கும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸின் கீழ் விவோ ஒய்300 ப்ரோ மாடலுடன் சேர்த்து வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ ஒய்300 மாடலும் அறிமுகமாகும்.

விவோ ஒய்300 ப்ரோவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? என்ன விலைக்கு வரும்? ஆன்லைனில் லீக் ஆன விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக்கேஜிங் பாக்ஸ் புகைப்படத்தின் வழியாக இது ஒரு பெரிய 6500mAh பேட்டரியுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே விவோ ஒய்300 ப்ரோவின் "முக்கிய விற்பனை புள்ளிகளில்" ஒன்றாக இருக்கும். விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
பேக்கேஜிங் பாக்ஸின் நிறத்தை வைத்து பார்க்கும்போது, விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஊதா நிற விருப்பத்துடன் வரலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இதுதவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போனிற்கான மீதமுள்ள அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இது கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்200 ப்ரோ ஸ்மார்ட்போனில் இருந்து சில அம்சங்களை "கடன்" வாங்கிக்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவோ ஒய்200 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை நினைவூட்டினால், இது 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 64எம்பி ப்ரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி சென்சார் உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில் விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 44W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் இதன் அப்கிரேட்டட் வெர்ஷன் ஆன விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இதை விட 1500mAh அதிக கெப்பாசிட்டி உடன் வருகிறது. உண்மையிலேயே இது 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ வி40 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ வி40 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.41,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜா ஆப்ஷன் ரூ.59,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் வழியாக வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








