Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.21,285 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி 600 சென்சார் கேமரா, நைட்போட்டோகிராபிக்கான ஆரா லைட், 12 ஜிபி ரேம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அமோலெட் பேனல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் 7.69 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொண்ட விவோ ஒய்300 ப்ரோ (Vivo Y300 Pro) களமிறங்கி இருக்கிறது. இந்த விவோ மாடலின் பீச்சர்கள், விற்பனை மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய்300 ப்ரோ அம்சங்கள் (Vivo Y300 Pro Specifications): இந்த விவோ போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் வருகிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஆரா லைட் (Aura Light) வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.21,285 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே போன்!

3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) பிரியர்களை இந்த போன் தட்டித்தூக்கி இருக்கிறது. ஆகவே, 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட குவாட் கர்வ்ட் (Quad Curved) மாடலாகும். 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், எச்டிஐர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட்டை பேக் செய்துள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 14 (OriginOS 14) செய்துள்ளது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.21,285 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே போன்!

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல்களும் விற்பனைக்கு வர இருக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருந்தும், பேட்டரி பேக்கப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, மிகப்பெரிய 6500mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. 7.69 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 193.6 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) கனெக்விடிட்டி உள்ளது.

இந்த விவோ ஒய்300 ப்ரோ போனில் பிளாக் ஜேட் (Black Jade), ஒயிட் (White), கோல்டு (Gold) மற்றும் டைட்டானியம் (Titanium) கலர்களில் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,285ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,655ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,020ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.29,570 ஆகவும் இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர 14ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Vivo Y300 Pro With 12GB RAM 50MP Camera 6500mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X