Home
Mobile

மார்ச் 31-க்கு பெரிய சம்பவம்.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பட்ஜெட் மாடலாக விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் (Vivo Y300 Pro Plus) வெளியாக இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள், விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்தியாவில் இந்த போன் வேறொரு மாடலாக வெளியாக இருக்கிறது. இருப்பினும், இந்த போன் முதலில் வெளியாக இருப்பதால் அதன் பட்ஜெட் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ள இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Vivo Y300 Pro Plus Specifications): இந்த விவோ போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 15 (OriginOS 15) கிடைக்க இருக்கிறது.

மார்ச் 31-க்கு பெரிய சம்பவம்.. பட்ஜெட்ல 7300mAh  பேட்டரி.. 90W சார்ஜ்!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

இந்த விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா + ஆரா எல்இடி (Aura LED) கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் கொண்ட 7300mAh பேட்டரி கிடைக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் வெறும் 7.89 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 199 கிராம் மட்டுமே எடை வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிண்ட் (In-display Fingerprint) வருகிறது.

சிம்பிள் பிளாக் (Simple Black), ஸ்டார்ரி சில்வர் (Starry Silver) மற்றும் மைக்ரோ பிங்க் (Micro Pink) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் போனானது, மார்ச் 31ஆம் தேதி சீன மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. 90W சார்ஜிங், 7300mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆகிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால், மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அதேபோல விலை விவரங்களும் கசிந்துள்ன. அதன்படி 8 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.23,589ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,734ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,592ஆகவும் இருக்கிறது.

இந்த விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் போனானது, இந்தியாவில் ஐக்யூ இசட்10 (iQOO Z10) மாடலாக வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லலாம். ஏனென்றால், அதிலும் 7300mAh பேட்டரி, 7.89 எம்எம் தடிமன் வருவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதேபோல டிசைனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இது ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 Pro Plus With 7300mAh Battery To Launch March 31 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X