Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.21170 போதும்.. 7300mAh கேமரா.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், விவோ பிரியர்களையும் தட்டித் தூக்கும்படியான பட்ஜெட்டில் 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட விவோ வி300 ப்ரோ பிளஸ் (Vivo Y300 Pro Plus) களமிறங்கி இருக்கிறது.

விவோ வி300 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Vivo Y300 Pro Plus Specifications): இந்த விவோ போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.21170 போதும்.. 7300mAh கேமரா.. SONY கேமரா!

மேலும், 3840Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி, 120FPS கேமிங் அவுட்புட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போல அடாமிக் ஐலேண்ட் (Atomic Island) பீச்சர் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 15 (OriginOS 15) கிடைக்கிறது. இந்த ஓர்ஜின்ஓஎஸ் மூலம் ஏஐ பீச்சர்களை பெறலாம்.

12 ஜிபி ரேம்+ 512 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மிட்-பிரீமியம் அவுட்புட் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் உள்ளது.

இந்த விவோ வி300 ப்ரோ பிளஸ் போனில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ஐஸ்பீல்டு கூலிங் சிஸ்டம் (Icefield Cooling System) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விவோவில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி, சோனி எல்ஓய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது. மேலும், 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) இந்த விவோ வி300 ப்ரோ பிளஸ் போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த கேமராவில் லைவ் போட்டோஸ் (Live Photos), ஏஐ எலிமினேஷன் (AI Elimination) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த விவோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. ஸ்டார் சில்வர் (Star Silver), மைக்ரோ பிங்க் (Micro Pink) மற்றும் சிம்பிள் பிளாக் (Simple Black) கலர்கள் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியின் விலை ரூ.21,170ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியின் விலை ரூ.23,525ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியின் விலை ரூ.25,880ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரியின் விலை ரூ.29,410ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி ஐக்யூ இசட்10 மாடலாக வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 Pro Plus With 50MP Camera 12GB RAM 7300mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X