Home
Mobile

மார்ச் 31 கச்சேரி இருக்கு.. புதிய Vivo போன்.. 7300mAh பேட்டரி, 24GB ரேம், 90W சார்ஜர்.. என்ன மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் தனது ஒய்300 சீரீஸை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, இந்த பிராண்ட் விவோ ஒய்300 (Vivo Y300) மற்றும் விவோ ஒய்300 ப்ரோ (Vivo Y300 Pro) ஆகிய மாடல்களை வெளியிட்டது. சமீபத்தில் விவோ ஒய்300ஐ (Vivo Y300i) மாடலும் அறிமுகமானது

இதற்கிடையில் சில சமீபத்திய தகவல்கள், இந்நிறுவனம் விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் (Vivo Y300 Pro Plus) மற்றும் விவோ ஒய்300 ஜிடி (Vivo Y300 GT) ஆகிய மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யலாம் என்று தெரிவிக்கின்றன. குறிப்பாக விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது வருகிற மார்ச் 31 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

புதிய Vivo போன்.. 7300mAh பேட்டரி, 24GB ரேம், 90W சார்ஜர்!

விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? லீக் ஆன போஸ்டர் இயங்க இது கர்வ்டு AMOLED பேனல் மற்றும் பேக் பேனலில் வட்ட வடிவிலான கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. இது பிளாக், பிங்க் மற்றும் ப்ளூ கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இம்மாத தொடக்கத்தில் வெளிவந்த லீக்ஸ் தகவல்களின்படி, விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) மூலம் இயக்கப்படலாம். இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் OIS ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப்பை (Dual Camera Setup) பேக் செய்யலாம்

மேலும் இது 12ஜிபி ரேம், 12ஜிபி விர்ச்சுவல் ரேம் (12GB RAM and 12GB Virtual RAM) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் அனுப்பப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 90W சார்ஜருடன் அனுப்பப்படலாம். கடைசியாக இது ஒரு பெரிய 7,300mAh பேட்டரி உடன் வரலாம். மார்ச் 31 ஆம் தேதி அறிமுகமாகும் பட்சத்தில் விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் தெரிய வரும்.

Take a Poll

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளன? ஐக்யூ நிறுவனம், வருகிற 2025 ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதன் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து விரைவில், இன்னொரு ஐக்யூ மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறுகிறது.

அது ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) வெர்ஷனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். இது 8GB அல்லது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கோல்ட் மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமான இது 7000mAh என்கிற பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது

இதேபோல ஒன்பிளஸ் நிறுவனமும் அதன் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிடுவது போல் தெரிகிறது. இது ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மாடலாக அறிமுகமாகலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதன் பொருள் தற்போது மலிவான ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஸ்மார்ட்போன் என்கிற பட்டத்தை வைத்திருக்கும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேஸிங் எடிஷனை (சுமார் ரூ.37,000) விட மலிவானதாக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 Pro Plus Major Specifications Leaked Ahead Expected Launch on March 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X