Home
Mobile

செப்டம்பர் 5 உறுதி.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ ஒய்300 ப்ரோ (Vivo Y300 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும செப்டம்பர் 5-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும். சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ ஒய்300 ப்ரோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய்300 ப்ரோ அம்சங்கள் (Vivo Y300 Pro Specifications): 6.77-இன்ச் மைக்ரோ-குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்பேன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 5 உறுதி.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் உடன் இந்த விவோ ஒய்300 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட் வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு அருமையாக இருப்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரியை கொண்டுள்ளது அசத்தலான விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதில் டால்பி ஆடியோ வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 5 உறுதி.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ ஒய்300 ப்ரோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 3 SoC), 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 பிரைமரி கேமரா (50MP Sony IMX 882 primary camera), 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே(3D Curved AMOLED Display)உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட விவோ டி3 ப்ரோ 5ஜி போன் ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo Y300 Pro Launch Date Revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X