அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo போன்..
விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்300 பிளஸ் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது சில வாரங்களுக்கு முன்பு IMEI தரவுத்தளத்தில் இந்த போன் காணப்பட்டது. அதன்பின்பு டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் இந்த விவோ ஒய்300 பிளஸ் ( Vivo Y300 Plus) போனின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளார். எனவே இந்த போனை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்300 பிளஸ் அம்சங்கள் ( Vivo Y300 Plus Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (FHD+ OLED display) வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸனாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (water and dust resistance) உடன் இந்த போன் வெளிவரும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் வெளிவரும்.

விவோ ஒய்300 பிளஸ் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜிங் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஒடிஜி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த புதிய விவோ ஒய்300 பிளஸ் போன் ஆனது ரூ.23,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








