சைலெண்டாக அறிமுகமான Vivo 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்300 பிளஸ் 5ஜி (Vivo Y300 Plus 5G) போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்300 பிளஸ் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்300 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Vivo Y300 Plus 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே ( curved AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்300 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2400 x 1080 பிக்சல்கள், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த குவால்காம் ஸனாப்டிராகன் 695 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 695 Soc) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்300 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில்
Funtouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்300 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்க் பிளாக் (Silk Black) மற்றும் சில்க் கிரீன் (Silk Green) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்300 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (water and dust resistance) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியும் இந்த போனில் உள்ளது.

விவோ ஒய்300 பிளஸ் 5ஜி போன் ஆனது 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜிங் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஒடிஜி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்300 பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. விவோ இந்தியா இ-ஸ்டோர் மூலம் இந்த புதிய போனை வாங்கலாம். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








