ரெடியா இருங்க.. 80W சார்ஜிங்.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்300 (vivo y300) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த நம்பர் மாதம் இறுதியில் விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில்வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்300 அம்சங்கள் (vivo y300 Specifications): சோனி ஐஎம்எக்ஸ்882 போர்ட்ரெயிட் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். பின்பு இந்த போனில் ஆரா லைட் (Aura Light) பேக் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 5000mAh பேட்டரி, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். தற்போது இந்த விவோ போனின் சில அம்சங்கள் தான் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்200 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்200 5ஜி அம்சங்கள் (Vivo Y200 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Octa Core Snapdragon 4 Gen 1)சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் விவோ ஒய்200 5ஜி போனுக்கு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13)ஆதரவுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
குறிப்பாக 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி போன். 2400 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 394 பிக்சல் டென்சிட்டி, டிசிஐ-பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன் 64 எம்பி மெயின் கேமரா+ 2 எம்பி டெப்த் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் இந்த போனில் ரியர் பிளாஷ் மற்றும் டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட அரோ எல்இடி இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஆன்டி-ஷேக் ஓஐஎஸ் (Anti-Shake OIS) கேமரா மாடல் ஆகும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி உடன் விவோ ஒய்200 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது
ப்ளூடூத் 5.1, வை-பை 5, ஜிபிஎஸ், என்ஃஎப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போன். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,975 விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications