Home
Mobile

சைலெண்டாக சம்பவம் செய்த Vivo.. 7620mAh பேட்டரி.. சோனி கேமரா.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ ஒய்300 ஜிடி (Vivo Y300 GT) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் 7620mAh பேட்டரி, 50எம்பி கேமரா, AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்300 ஜிடி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்300 ஜிடி அம்சங்கள் (Vivo Y300 GT Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 ஒ 1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் டிசி டிம்மிங் (HDR10+ DC Dimming), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சைலெண்டாக சம்பவம் செய்த Vivo.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்யலாம்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட் (MediaTek Dimensity 8400 chipset) உடன் விவோ ஒய்300 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்300 ஜிடி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது.

7620mAh பேட்டரி வசதியுடன் விவோ ஒய்300 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, புளூடூத் 6.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் இந்த போன் டெசர்ட் கோல்ட் மற்றும் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த விவோ ஒய்300 ஜிடி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும். பின்பு இந்த புதிய விவோ போனின் ஆரம்ப விலை 1899 yuan (இந்திய மதிப்பில் ரூ.22,554) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 GT launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X