பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.20,499 போதும்.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
டயமன்ட் கட் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கேமரா, ஈ4 அமோலெட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) போனானது இப்போது டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப ஏஐ இமேஜிங் (AI Imaging), ஏஐ சூப்பர் மூன் (AI Super Moon), ஏஐ எரைஸ் (AI Erase) மற்றும் ஏஐ என்ஹான்ஸ் (AI Enhance) போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ டாக்குமெண்ட் (AI Document) போன்ற பீச்சர்களையும் இந்த விவோ ஒய்300 5ஜி கொடுக்கிறது.

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): இந்த விவோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்கும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. எல்இடி லைட் மட்டுமல்லாமல், ஆரா லைட் (AI Light) வருகிறது.
நைட் போட்டோகிராபிக்காக இந்த ஆரா லைட் கிடைக்கிறது. இந்த விவோ போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளே வருகிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் P3 கலர் காமட் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்300 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கூடுதலாக கிடைக்கிறது.
இந்த விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பர்ஃபாமென்ஸ் குறை சொல்ல முடியாது. ஆனால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். இந்த விவோ ஒய்300 போனில் பட்ஜெட் அவுட்புட் கொண்ட அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
மேலும், ஏஐ கேமரா மற்றும் மல்டி-மீடியா பீச்சர்களுடன் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) கிடைக்கிறது. இந்த விவோவில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கும் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.
இந்த விவோ ஒய்300 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,499 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் ஈஎம்ஐ ஆப்ஷனுக்கு கிடைக்கிறது.
இதற்கு மல்டிபிள் பேங்க் கார்டுகள் பயன்படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால், ரூ.1,100 டிஸ்கவுண்ட் மட்டுமே கொடுக்கப்படும். இந்த விவோ ஒய்300 5ஜி போனை டைட்டானியம் சில்வர் (Titanium Silver), பாண்டம் பர்பிள் (Phantom Purple) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








