பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
டைட்டானியம் டிசைன் மட்டுமல்லாமல், ஈ4 அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் சிப்செட் கொண்ட இந்த விவோ போனின் விலை மற்றும் முழு பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்300 5ஜி அமேசான் விற்பனை (Vivo Y300 5G Amazon Sale): இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ. 23,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1,000 நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

அதேபோல 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.22,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம். இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆனால், இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்ய வேண்டும். ரூ.19,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம்.
விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): இந்த விவோ போனில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி பொக்கெ கேமரா வருகிறது. டூயல் கலர் டெம்ப்ரேச்சர் (Dual Color Temperature) வருகிறது. மேலும், ஆட்டோ போகஸ், ஏஐ அரோ லைட் சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ எரைஸ் (AI Erase) மற்றும் ஏஐ என்ஹான்ஸ் (AI Enhance) ஸ்மார்ட் பீச்சர்களும் கிடைக்கின்றன.

இந்த விவோ போனில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. கூடுதலாக ஸ்டோரேஜ் கொடுக்க 1 டிபிக்கான எஸ்டி சப்போர்ட் உள்ளது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.79 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. பாண்டம் பர்பிள் (Phantom Purple), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications