Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த மாதம் இறுதியில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): 6.67-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1800 nits of peak brightness) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த விவோ ஒய்300 5ஜி போனில் இருக்கும். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ ஒய்300 5ஜி போன் வெளிவரும். மேலும் இந்தியாவில் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y300 5G specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X