சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. இந்தியாவில் அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சோனி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்300 5ஜி போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் E4 அமோலெட் டிஸ்பிளே (E4 AMOLED display) வசதியுடன் விவோ ஒய்300 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1800 nits of peak brightness) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த இந்த விவோ ஒய்300 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். ஆரா லைட் யூனிட் (Aura Light unit), டூயல் எல்இடி பிளாஸ் உள்ளிட் வசதிகளும் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த விவோ போனை நம்பி வாங்கலாம்.
5000mAh பேட்டரி உடன் இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்300 5ஜி போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பாண்டம் பர்பிள் ( Phantom Purple), டைட்டானியம் சில்வர் (Titanium Silver), எமரால்டு கிரீன் (Emerald Green) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புதிய விவோ போனை ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும். வரும் நவம்பர் 26-ம் தேதி விவோ ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications