நவம்பர் 21 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வருகிறது Vivo 5ஜி போன்..
விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 21-ம் தேதி இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதுவும் கடந்த செப்டம்பரில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி40 லைட் 5ஜி (Vivo V40 Lite 5G) போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 5ஜி போன்.
குறிப்பாக டைட்டானியம் சில்வர் (Titanium Silver), டைனமிக் பிளாக் (Dynamic Black) மற்றும் எமரால்டு கிரீன் (Emerald Green) நிறங்களில் விவோ ஒய்300 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த இந்த விவோ ஒய்300 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன்.
6.67-இன்ச் E4 அமோலெட் டிஸ்பிளே (E4 AMOLED display) வசதியுடன் விவோ ஒய்300 5ஜி வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1800 nits of peak brightness) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி + 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
5000mAh பேட்டரி உடன் இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி இந்த விவோ ஒய்300 5ஜி போனில் இருக்கும். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன். மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ ஒய்300 5ஜி போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications