அமேசான் மிரளுது.. ரூ.19,300-க்கு 5000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G) வெளியாகி இருப்பதை தொடர்ந்து, முந்தைய மாடலான விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த விவோ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் 128 ஜிபி மாடலானது ரூ.20,050 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மாடலானது ரூ.22,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு நேரடியாக ரூ.1,949 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.19,300 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். 256 ஜிபி மாடலுக்கும் ரூ.750 தள்ளுபடி உள்ளது.
இந்த விவோ ஒய்300 5ஜி போனை பாண்டம் பர்பிள் (Phantom Purple), எம்ரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் + ஆரா லைட் பேக் செய்துள்ளது. இப்போது, மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொடுக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து இருக்கிறது.
நைட்போட்டோகிராபிக்காக ஆரா லைட் மட்டுமல்லாமல், பிரீமியம் அவுட்புட் கொடுக்க சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு 2 எம்பி பொக்கெ கேமரா சப்போர்ட் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்கள் மற்றும் எடிடிங் பீச்சர்கள் உள்ளன.
இந்த விவோ ஒய்300 5ஜி போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அதில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், P3 கலர் காமட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கிறது. ஓடிடி பிரியர்கள் விரும்பும் பிளாட் டிஸ்பிளே டிசைன் வருகிறது.
இந்த பட்ஜெட்டில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. 5000mAh பேட்டரி கிடைக்கிறது. வெறும் 7.79 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 188 கிராம் எடை மட்டுமே வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற வழக்கமாக மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








