சரசரவென குறைந்த Vivo 5ஜி போன் விலை.. 50எம்பி சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன். இப்போது விவோ ஒய்300 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): தரமான ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் E4 அமோலெட் டிஸ்பிளே (E4 AMOLED display) கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1800 nits of peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ ஒய்300 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர ஆரா லைட் யூனிட் (Aura Light unit), டூயல் எல்இடி பிளாஸ் உள்ளிட் வசதிகளும் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000mAh பேட்டரி இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த விவோ போன்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்கள் விவோ ஒய்300 5ஜி போனில் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








