Home
Mobile

அமேசான் கிரேட் சம்மர் சேல்.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த இரண்டு விவோ (Vivo) ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கின்றன. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்29 5ஜி (Vivo Y29 5G) ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த விவோ போனை ரூ.12749 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் கிரேட் சம்மர் சேல்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19749 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்29 5ஜி அம்சங்கள் (Vivo Y29 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் விவோ ஒய்29 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு FunTouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன்வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் 6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த விவோ போனின் எடை 198 கிராம் ஆகும். குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, டூயல் சிம், வைஃபை, புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue), டைட்டானியம் கோல்டு (Titanium Gold), டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் E4 அமோலெட் டிஸ்பிளே (E4 AMOLED display) கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1800 nits of peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஒய்300 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ ஒய்300 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர ஆரா லைட் யூனிட் (Aura Light unit), டூயல் எல்இடி பிளாஸ் உள்ளிட் வசதிகளும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி உடன் விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த விவோ போன்.

அமேசான் கிரேட் சம்மர் சேல்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் விவோ நிறுவனம் வரும் வாரங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல இந்தியாவில் வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y300 5G and Vivo Y29 5G available at discounted prices in amazon sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X