நான்கு ரியர் கேமரா ஆதரவுடன் விவோ Y30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y30 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலேசியாவில் முதலில் விற்பனைக்கு வரும் என்றும், பின்பு விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் 6.47-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1560 பிக்சல்திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்தபாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது விவோ லு30 ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35(எம்டி6765) எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

விவோ Y30 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y30 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

விவோ Y30 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,800-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications