5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y30 Standard Edition ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y30 Standard Edition ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான கேமரா, சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,700-ஆக உள்ளது.

விவோ Y30 Standard Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும்சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FunTouch OS UI 10.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y30 Standard Edition ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறுஅம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோY30 Standard Edition ஸ்மார்ட்போன்.

குறிப்பாக விவோ Y30 Standard Edition சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுää ஃபேஸ் அன்லாக்ää கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளும் இவற்றுள்ள அடக்கம்.

மேலும் Aurora மற்றும் Cloud Water Blue நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யு.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் உள்ளது. பின்பு விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications