Vivo Y30 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: 4 கேமரா, 5000 mAh பேட்டரி!
6.47 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, நான்கு கேமராக்கள் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்ட விவோ ஒய் 30 ஸ்மார்ட்போனுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்
விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் விவோ இந்தியா வலைத்தளத்திலும் காண்பிக்கப்படுகிறது. விவோ ஒய்30 ஒரே வேரியண்டில் மட்டுமே வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு பிளாக் மற்றும் டாசில் ப்ளூ போன்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.

விவோ ஒய் 30 விலைக்குறைப்பு
விவோ ஒய் 30 தற்போது ரூ.13,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விலை ரூ.14,990 என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய விலை விவோ இந்தியா வலைத்தளத்திலும் அமேசானிலும் காண்பிக்கப்படுகிறது, ஆனால் பிளிப்கார்ட்டில் தற்போதுவரை புதிய விலை காண்பிக்கப்படவில்லை. விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஸ்மார்ட்போன்களுக்கு சில தள்ளுபடிகளையும் வழங்குகிறது.

6.47இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் 6.47இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35
விவோ ஒய்30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35(எம்டி6765) எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

13 எம்பி பிரைமரி சென்சார் கேமரா
விவோ Y30 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி சென்சார்+ 8 எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இருக்கிறது. மேலும் 8 எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்
4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பாதுகாப்பு அம்சத்திற்கு என பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications