அமோக வரவேற்பு: விவோ Y30 புதிய வேரியண்ட் விரைவில்- மலிவு விலையில் 6ஜிபி ரேம் மாடல்!
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடாக 6ஜிபி வேரியண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

6ஜிபி ரேம் வேரியண்ட் விரைவில்
புதிய மாறுபாடு வேரியண்டுக்கும் முந்தைய வேரியண்டுக்கும் எந்த மாறுபாடும் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. விவோ ஒய் 30 முன்பாக ஒற்றை வேரியண்ட்களில் மட்டுமே அறிமுகமானது. அது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியாகும். விவோ ஒய் 30 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டில் வரும் என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவலும் வெளியானது.

விவோ ஒய்30 ஸ்மார்ட்போன்
விவோ ஒய்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த தகவலை உறுதி செய்யும் விதமாக சில அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. வரவிருக்கும் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன் டாஸல் ப்ளூ மற்றும் எமரால்டு பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
விவோ ஒய்30 புதிய 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.14,990 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகமான விவோ 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.14,999 ஆக ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டது. பின் விலைக்குறைக்கப்பட்டு ரூ.13,990 ஆக கிடைக்கிறது.

6.47இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் 6.47இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
விவோ ஒய்30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35(எம்டி6765) எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

13 எம்பி முதன்மை கேமரா
விவோ Y30 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி சென்சார்+ 8 எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இருக்கிறது. மேலும் 8 எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இருக்கிறது.

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர்
4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பாதுகாப்பு அம்சத்திற்கு என பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications