இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை?
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின்அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் 6.47-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம்மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது விவோ லு30 ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35(எம்டி6765) எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

விவோ Y30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

விவோ Y30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y30 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14.999-ஆக உள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications