களமிறங்கிய Vivo- எவ்வளவு முடியுமோ அவ்வளவும் இருக்கு, பக்கா ஸ்மார்ட்போன்!

|

Vivo Y30 5G ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஐபிஎஸ் HD+ டிஸ்ப்ளே (1,600x720 பிக்சல்) தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை நானோ சிம் ஸ்லாட்டைக் கொண்டிருக்கிறது. மிட் ரேன்ஜ் விலைப் பிரிவைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அனைத்தும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்ன தெரியுமா?

குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்ன தெரியுமா?

Vivo Y30 5G ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல் கேமரா அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களை முதலில் பார்க்கலாம்.

இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமில்லை இதன் இணைப்பு ஆதரவுகளும் மேம்பட்ட வகையில் உள்ளது.

கைரேகை ஸ்கேனராக பயன்படும் பவர் பட்டன்

கைரேகை ஸ்கேனராக பயன்படும் பவர் பட்டன்

5,000mAh, யூஎஸ்பி டைப் சி போர்ட், டூயல் சிம் ஆதரவுகளை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டன் பொருத்தப்பட்டிருக்கிறது.

இது பாதுகாப்பு அம்சத்துக்கான கைரேகை ஸ்கேனர் ஆதரவாகவும் செயல்படும். கூடுதலாக மொபைல் லாக் மற்றும் அன்லாக்கிற்கு ஃபேஸ் லாக் அம்சம் இருக்கிறது. அம்சங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

Vivo Y30 5G சிறப்பம்சங்கள்

Vivo Y30 5G சிறப்பம்சங்கள்

Vivo Y30 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.51 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே HD+ ஆதரவோடு 1,600x720 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது. இதில் டூயல் நானா சிம் ஸ்லாட் இருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது.

பல்வேறு கூடுதல் அம்சங்களோடு கேமரா

பல்வேறு கூடுதல் அம்சங்களோடு கேமரா

Vivo Y30 5G ஸ்மார்ட்போனானது டூயல் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இது 50 எம்பி முதன்மை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக 2 எம்பி பொக்கே லென்ஸ் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, மங்கலான வெளிச்சத்தில் தெளிவான படங்கள், சூப்பர்நைட் பயன்முறை, டூயல் காட்சி வீடியோ உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது.


முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டையும் பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்ய இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கூடுதல் ஆதரவுடன் கேமராக்கள் மற்றும் டாக்குமெண்ட் ஸ்கேனிங் அம்சம்

கூடுதல் ஆதரவுடன் கேமராக்கள் மற்றும் டாக்குமெண்ட் ஸ்கேனிங் அம்சம்

கேமரா அம்சங்கள் இதோடு முடிவடையவில்லை, பிக்சர் இன் பிக்சர் பயன்முறை ஆதரவு, ஆட்டோஃபோகஸ், மல்டி ஸ்டைல் போர்ட்ரெய்ட், ஃபேஸ் பியூட்டி, பனோரமா மோட், லைவ் போட்டோ, ஸ்லோ மோஷன் மற்றும் டைம்-லேப்ஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இருக்கிறது.

கூடுதலாக விவோ ஒய்30 5ஜி ஸ்மார்ட்போனில் டாக்குமெண்ட் ஸ்கேனிங் அம்சமும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

அனைத்து அம்சங்களும் பெஸ்ட்

அனைத்து அம்சங்களும் பெஸ்ட்

கேமரா ஓகே, பிற அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் இருக்கலாம். பிற அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் தான் இருக்கிறது. அல்ட்ரா கேம் பயன்முறை 2.0 மற்றும் 4D கேம்களுக்கான ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. மல்டி-டர்போ 5.5, SoC, GPU, RAM என அனைத்தும் ஸ்மார்ட்போனின் டச் அம்சத்தை மேம்படுத்தி வழங்குகிறது. இவை அனைத்தும் கேமிங் சௌகரியத்தை மையமாக வைத்து வழங்கப்பட்டிருக்கிறது.

உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள்

உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள்

இந்து புது மாடல் விவோ ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சங்களும் மிக உயர்ந்ததாகவே இருக்கிறது. லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பவர் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஃபேஸ் அன்லாம் அம்சமும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

27.2 நாட்கள் பேட்டரி ஆயுள்

27.2 நாட்கள் பேட்டரி ஆயுள்

Vivo Y30 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. வெயிட்டிங் பயன்முறையில் இருக்கும் போது இதன் பேட்டரி ஆயுளானது 27.2 நாட்களுக்கு நீடிக்கும். அதோடு 140 மணிநேர ஆடியோ ப்ளேபேக் மற்றும் 15.9 மணிநேர இணைய பயன்பாட்டு நேரத்தையும் வழங்குகிறது.

10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பெயர் குறிப்பிடுவது போல் இது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் இணைப்பு மூலம் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் எடை தோராயமாக 193 கிராம் ஆகும்.

Vivo Y30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். விவோ ஒய்30 5ஜி ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் பேஸ்புக் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.18,900 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் ப்ளாக் மற்றும் ரெயின்போ பேண்டஸி வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

விவோ ஸ்மார்ட்போனுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. விவோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவோ ஒய்30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் எந்த அளவு அம்சங்கள் புகுத்த முடியுமோ அத்தனை அம்சங்களையும் விவோ இந்த ஸ்மார்ட்போனில் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y30 5G Launched with Mediatek Dimensity 700 Soc, 6GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X