மீண்டும் மீண்டும்-ஆ.. இன்னொரு புது VIVO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி, IP64, மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ்!
விவோ நிறுவனம் தனது ஒய்29 சீரிஸை, பல்வேறு நாடுகளில் படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. இதுவரை இந்த சீரீஸில் விவோ ஒய்29 4ஜி, விவோ ஒய்29 5ஜி மற்றும் விவோ ஒய்29எஸ் 5ஜி ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் - விவோ ஒய்29டி 5ஜி (Vivo Y29t 5G) என்கிற புதிய பட்ஜெட் விலை 5ஜி மாடல் ஆனது அமைதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
விவோவின் மற்ற ஒய்29 சீரீஸ் மாடல்களைப் போலவே விவோ ஒய்29டி 5ஜி ஸ்மார்ட்போனும் ஒரு பெரிய டிஸ்பிளே, நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்பை கொண்டுள்ளது. விவோ ஒய்29டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

விவோ ஒய்29டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 1600 × 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 260ppi பிக்சல் டென்சிட்டி
- ஹை ப்ரைட்னஸ் மோட்-ல் 570 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ்
- 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 6ஜிபி அல்லது 8ஜிபி LPDDR4X ரேம்
- 256ஜிபி வரை eMMC 5.1 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 0.08-மெகாபிக்சல் சப் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 15W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 6,000mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட பன்டச் ஓஎஸ் 15
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
- டூயல் சிம் 5ஜி
- டூயல்-பேண்ட் வைஃபை
- ஐபி64 ரேட்டிங்
- MIL-STD-810H-மதிப்பிடப்பட்ட இராணுவ-தர ஷாக் ரெசிஸ்டன்ஸ்
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ்
- என்எப்சி
- யூஎஸ்பி-சி
- அளவீட்டில் 167.30 x 76.95 x 8.19மிமீ
- எடையில் 202 கிராம்
விவோ ஒய்29டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: மலேசியாவில் விவோ ஒய்29டி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.22,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் கோல்ட் மற்றும் ஜேட் கிரீன் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வேறு எந்தெந்த சந்தைகளில் வாங்க கிடைக்கும் என்பது பற்றி தெளிவு இல்லை.
நினைவூட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் தான், விவோ நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக விவோ ஒய்400 ப்ரோ 5ஜி (Vivo Y400 Pro 5G) மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ரீஸ்டைல் ஒயிட், ஃபெஸ்ட் கோல்ட் மற்றும் நெபுலா பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோ இந்தியா வலைத்தளத்தில் ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கிறது. வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரை இது 7.49மிமீ தடிமனை கொண்டுள்ளது மற்றும் இந்த விலை பிரிவில், 3டி கர்வ்டு டிஸ்பிளே கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக விவோ ஒய்400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பல ஏஐ ஆதரவு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் கூகுளின் மிகவும் பிரபலமான சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) ஆதரவும் அடங்கும். இது ஸ்க்ரீனில் தெரியும் விஷயத்தை சர்க்கிள் செய்வதன் மூலம் அதை சேர்ச் செய்து, அதைப்பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகவும் பிரபலமான அம்சமாகும்


Click it and Unblock the Notifications